• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான நிருமாணிப்பு மேற்பார்வைக்காக மதியுரைக் கம்பனியொன்றைத் தெரிவுசெய்தல்
- மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் பொத்துஹெரயிலிருந்து றம்புக்கன ஊடாக கலகெதர வரையிலான (32.5கி.மீ) 3 ஆம் பகுதியின் நிருமாணிப்பு மேற்பார்வைக்காக மதியுரை சேவையை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,848 மில்லியன் ரூபாவுக்கு வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.