• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலி இராச்சியத்தில் சமாதான செயற்பாட்டிற்காக கலந்து கொள்ளும் யுத்த படையணிக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- மாலி இராச்சியத்தில் சமாதான செயற்பாட்டிற்காக இலங்கையிலிருந்து கலந்துகொள்ளவுள்ள யுத்த படையணிக்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட சருவதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முன்வைக்கப்பட்ட கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் அனுசரணையான விலையை முன்வைத்துள்ள 03 நிறுவனங்களிடமிருந்து உரிய உபகரணங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக சனாதிபதி அதிமேதகைய மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.