• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக உடைமையாக்கப்பட்ட காணி சார்பில் வழங்கப்படும் மாற்று காணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக உடைமையாக்கப்பட்ட காணிகளில் குடியிருந்தவர்களுக்கு ஏற்கனவே மாற்று காணிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த காணிகளில் பாதைகள், மின்சாரம் மற்றும் நீர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.