• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தேசிய கடன் உத்தரவாத நிறுவனமொன்றைத் தாபித்தல்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு நீண்டகால கடன் உத்தரவாதங்களை வழங்குவதற்கு தேசிய ரீதியில் வழிமுறையொன்று இல்லாமையினால், அவர்களுக்கு புதிய முதலீட்டுத் தேவைகளுக்காக நிதி பெற்றுக் கொள்ளும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்று வழங்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களினால் புதிய முதலீடுகள் சார்பில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளும் போது தேவையான கடன் உத்தரவாதங்களை வழங்குவதற்கு கம்பனிகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் பொது வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக 'தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தை' தாபிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.