• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பில் இலங்கைக்கான அங்கீகார அந்தஸ்தை பெற்றுக் கொள்தல்
- ​மேற்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், பொருளாதாரத்தின் நிலைபேறுடைய தன்மையை பேணுதல் மற்றும் விரிவுபடுத்துதல், உறுப்பு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துதல், ஆபிரிக்க கண்டத்தின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு இசைந்து போதல் போன்ற நோக்கங்களைக் கொண்டு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பானது 1995 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, 15 மேற்கு ஆபிரிக்க நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இவற்றுள் 12 நாடுகளுடன் இலங்கை தற்போது இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றது.

ஆபிரிக்க வலயத்தில் இலங்கை பேணிவரும் உறவு முக்கியமாக பொருளாதார உறவுகளை விரிவுபடுத்திக் கொள்ளும் போது மேற்போந்த அமைப்பில் இலங்கை அங்கீகார அந்தஸ்தை பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும். இதற்கமைவாக, தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.