• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை கொள்வனவு செய்வதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
- இலங்கை புகையிரத திணைக்களத்தினால் மலையக புகையிரத சேவையின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்காக 12 என்ஜின்களையும் 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து 9 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டத்தின் செலவு 93.86 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இதற்குத் தேவையான நிதி பெற்றுக் கொள்ளும் ​பொருட்டு Hongkong and Shanghai Banking Corporation Limited கம்பனியுடனும் ஹட்டன் நஷனல் வங்கியுடனும் கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.