• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவை பலப்படுத்துதல்
– இலங்கையில் இலஞ்சம் அல்லது ஊழல்களைத் தடுப்பதற்காக தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனமானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவாகும். இந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட வேண்டியுள்ள சில புலனாய்வுகள் கடும் உட்சிக்கல் வாய்ந்தவையாவதோடு, அதற்குத் தேவையான நவீன தொழினுட்ப உதவியினை வழங்குவதற்கும் அதன் உத்தியோகத்தர்களின் மற்றும் ஆற்றலை விருத்தி செய்வதன் மூலம் அதனை வினைத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையென இனங்காணப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக நிதியுதவி வழங்குவதற்கு சனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழில் நடவடிக்கைகள் தொடர்பிலான ஐக்கிய அமெரிக்க குடிரசின் அரசாங்க திணைக்கள பணியகமானது உடன்பாடு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, இந்த நிறுவனத்தினால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள 235,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியத்தை (அண்ணளவாக 35.25 மில்லியன் ரூபா) பெற்றுக் கொள்ளும் பொருட்டு உரிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.