• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தின் மூலம் சர்வதேச மட்டத்தில் பயிற்சி பாடநெறிகளையும் பட்டறைகளையும் நடாத்துதல்
– இலங்கையில் நீர்ப்பாசன வழிமுறை தொடர்புடைய அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதேபோன்று இது சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் குறுகியகால பயிற்சி பாடநெறிகளுக்கு சருவதேச கேள்விகளை கட்டியெழுப்பும் சாத்தியம் உள்ளதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சருவதேச நீர் முகாமைத்துவ நிறுவனம், சருவதேச நீர் கேந்திரநிலையம் போன்ற நிறுவனங்களை ஒன்றிணைத்துக் கொண்டு, கொத்மலை, நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவம் பற்றிய சர்வதேச பயிற்சி நிறுவனத்திலும் கல்கமுவ, நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்திலும் சர்வதேச மட்டத்தில் பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதற்குத் தேவையான வசதிகளையும் நிருவாக மற்றும் நிதி வழிமுறைகளையும் தயாரிக்கும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.