• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரன்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்கா சார்பில் நிருவாக சபையொன்றை நியமித்தல்
– ரன்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்காவின் பணிகளை சிறந்த முறையிலும் வினைத்திறனுடனும் நிறைவேற்றுவதற்காகவும் அதேபோன்று இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும் போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களை தடுக்கும் பொருட்டும் இந்த பூங்கா சார்பில் நிருவாக சபையொன்றை நியமிப்பது பொருத்தமானதென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, துறைசார்ந்த நிபுணர்கள் உட்பட உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட நிருவாக சபையொன்றை நியமிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.