• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளப்பெருக்கு அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்படுபவர்களின் உயிர் காப்புக்கள் பயன்படுத்தும் பொருட்டு 100 விசேட படகுகளை உற்பத்தி செய்து கொள்ளல்
– வௌ்ளப்பெருக்கு அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்படுபவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காகவும் வௌ்ளத்தில் சிக்குண்டுள்ளவர்களுக்கு உணவு உட்பட அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கும் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்போது போதுமான அளவு படகுகளை பெற்றுக் கொள்ள முடியாமற் போவதும் சில படகுகளின் அத்தியாவசிய அடிப்படைக் கருவிகள் இல்லாமையும் கடந்த வௌ்ள நிலைமைகளின் போது முகம் கொடுக்க வேண்டி வந்த பிரதான பிரச்சினைகளாகும். இதற்கு மாற்று வழியாக வௌ்ள அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்தக் கூடிய விசேட படகொன்று கடற்படையினரால் நிருமாணிக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களிலும்கூட தேடுதல் மற்றும் காப்பாற்றுதல் உட்பட நிவாரண சேவைகள் சார்பில் பயன்படுத்துவதற்கு இயலுமாவதோடு, உயிர்காப்பு அங்கிகள், மின் விளக்குகள், சூரியகலன்கள், முதலுதவி யுனிட்டுகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது. ஒரே தடவையில் சுமார் 10 பேர்களுக்கு பயணிக்கவும் முடியும். இதற்கமைவாக இந்த விசேட 100 படகுகளை கடற்படையின் ஊடாக நிருமாணித்துக் கொள்வதற்கும் வௌ்ள அனர்த்தத்திற்கு ஆளாகும் உயர் ஆபத்துமிக்க பிரதேசங்களை இனங்கண்டு இந்த பிரதேசங்களுக்கு அண்மித்து குறித்த படகுகளை நிறுத்தி வைப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.