• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"செவன" சீட்டிழுப்பின் புதிய லொத்தரின் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்
– தேசிய லொத்தர் சபையினால் நடாத்திச் செல்லப்படும் செவன சுரண்டும் லொத்தருக்கு மேலதிகமாக 'செவன' என்னும் பெயரில் சீட்டிழுப்பு லொத்தர் ஒன்று 2017‑06‑23 ஆம் திகதியன்று வரும் தேசிய வீடமைப்பு தினத்திற்கு ஒருங்கிணைவாக சந்தைக்கு வழங்கப்பட்டுள்ளதோடு அதன் முதலாவது சீட்டிழுப்பு 2017‑07‑27 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த லொத்தரின் சுப்பர் பரிசாக கொழும்புக்கு அண்மித்த பிரதேசத்திலோ அல்லது வேறு நகர பிரதேசத்திற்கு அண்மையிலோ சகல வசதிகளுடன் கூடிய புதிய வீடொன்றை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினாலும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினாலும் சிபாரிசு செய்யப்படும் நிறுவனம் ஒன்றிடமிருந்து பரிசு சார்பில் வழங்கப்படும் வீட்டினை கொள்வனவு செய்வதற்கும் இந்த லொத்தர் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தின் உரிய பங்களிப்புத் தொகையை செவன நிலையத்திற்கும் வழங்குவதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.