• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும் Hydrochloroflurocarbon பாவனையை நீக்குதல்
– ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான வியானா மற்றும் மொன்றியல் சமவாயத்தின் உடன்படிக்கைகளுக்கும் பொறுப்புகளுக்கும் அமைவாக Hydrochloroflurocarbon என்னும் ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன பொருளின் பாவனையை குறைப்பதற்கும் அதற்குப் பதிலாக ஓசோன் நட்புறவுமிக்க மாற்று வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் 1989 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை நடவடிக்கை எடுத்துவருகின்றது. Hydrochloroflurocarbon இரசாயன பொருள் உபயோகப்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளின் திருத்த மற்றும் பராமரிப்புசேவை துறையின்பால் உருவாகக் கூடிய பிரதிகூலமான தாக்கத்தைக் கட்டுப்படுத்தி Hydrochloroflurocarbon இரசாயன இறக்குமதியை வரையறுப்பதற்கு குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் 2016‑08‑16 ஆம் திகதியன்று தொழினுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது. பின்வரும் சிபாரிசுகளையும் உள்ளடக்கி இந்த குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* குளிர்சாதன பெட்டிகள், உறைநிலை குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டி இயந்திரங்கள் மற்றும் வெப்ப குழாய் அலகுகள், நீர் குளிரூட்டிகள், ஐஸ் உற்பத்தி இயந்திரங்கள், வாகன ஆற்றலை குளிர்சாதன பெட்டிகள் அல்லது கொள்கலன்கள் அடங்கலாக மொன்றியல் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓசோன் படலத்தை பலவீனமாக்கும் உபகரண தொகுதிகளுக்குரிய பாவித்த அல்லது திருத்தப்பட்ட உபகரணங்களின் இறக்குமதியை உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தடை செய்தல்.

* உலகளாவிய வெப்பமயமாதல் செயல்விளைவு 100 மற்றும் ஓசோன் படலத்தை பலவீனமாக்கும் செயல்விளைவு 0.03 ஐ விஞ்சும் Hydrochloroflurocarbon இரசாயனம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களை அல்லது கருவிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை இலங்கையில் உற்பத்தி செய்வதை, ஒன்று சேர்ப்பதை 2018‑01‑01 ஆம் திகதியிலிருந்து தடை செய்தல்.

* உலகளாவிய வெப்பமயமாதல் செயல்விளைவு 100 மற்றும் ஓசோன் படலத்தை பலவீனமாக்கும் செயல்விளைவு 0.03 ஐ விஞ்சாத Hydrochloroflurocarbon இரசாயனம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களை அல்லது கருவிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை இலங்கையில் உற்பத்தி செய்வதை, ஒன்று சேர்ப்பதை 2021‑01‑01 ஆம் திகதியிலிருந்து தடை செய்தல்.

* குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டி உபகரணங்களின் சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை செய்யும் நிறுவனங்களுக்கு சுற்றாடல் பாதுகாப்பு உரிமப்பத்திரங்களை வழங்கும் போது உறைகுளிரூட்டும் மீட்சி மற்றும் மீள்சுழற்சி செய்யக்கூடிய உபகரணமொன்று இருத்தல் கட்டாயமானதாகும் என்னும் நிபந்தனையொன்றை 2019‑01‑01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் சேர்ப்பதற்கும்.