• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இடையிலான மானிய மற்றும் அமுல்படுத்தல் உடன்படிக்கை
– பொருளாதார விருத்தியினை ஏற்படுத்துவதன் மூலம் தெரிவு செய்ய்படும் நாடுகளில் நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்படும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் வௌிநாட்டு மானிய உதவி முகவராண்மையொன்றான Millennium Challenge Corporation நிறுவனமானது இலங்கையில் பொருளாதார விருத்திக்கு காரணமாய் அமையும் விதத்தில் முக்கிய துறைகள் சிலவற்றை அபிவருத்தி செய்யவதற்காக 7.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியமொன்றை எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் வழங்கவுள்ளது. இந்த மானியத்தை பெற்றுக் கொள்வதற்கும் அதன்கீழான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவும் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.