• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளம் கமத்தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல்
– நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி வர்த்தக மட்டத்தில் கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய தொழில் முயற்சிக்கான திறமையுடைய இளம் விவசாய சமூகமொன்று நாட்டில் விருத்தியடையாமை இந்த நாட்டின் கமத்தொழில் துறையின் குறைந்த வினைத்திறனுக்கு நேரடியாக பாதிக்கும் பிரச்சினையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. கமத்தொழில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக கமத்தொழில் பீடங்களில் கணிசமான இளைஞர்கள் வருடாந்தம் தகைமைகளை பூர்த்தி செய்கின்ற போதிலும் வேறு துறைகளுடன் ஒப்பிடும் போது கமத்தொழில் துறையில் இலாபம் இல்லாமையும் இந்த துறையில் ஈடுபடுவது சமூக அந்தஸ்தினை கொண்டிருக்காததன் காரணமாகவும் இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக கமத்தொழிலில் ஈடுபடுவதில்லை.

நாட்டின் தேசிய உற்பத்திக்கு கமத்தொழில் துறையின் பங்களிப்பினை உயர் மட்டத்தில் பேணும் நோக்கில் வர்த்தக மட்டத்தில் கமத்தொழிலில் ஈடுபடக்கூடிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் கருத்திட்டமொன்று 'உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டம்' என்பதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, அதன் முன்னோடி கருத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் 100 இளம் கமத்தொழில் முயற்சியாளர்களுக்கு நவீன தொழினுட்ப கமத்தொழில் உபகரணங்கள் அடங்கலாக வளங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக சலுகைக் கடன் வசதிகளை வழங்குவதற்கும் இந்த முன்னோடி கருத்திட்டத்தின் வெற்றியின் மீது வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து 1,000 இளம் தொழில் முயற்சியாளர்களையும் அடுத்த கட்டத்தில் நாடு முழுவதும் 10,000 இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.