• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Micro: Bit Foundation நிறுவனத்துக்கும் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் அறிவினை விருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளதுடன், இதற்காக "அடிப்படை வன்பொருள் பாவனை ஊடாக தொடர்புகொள்ள கூடியவை பற்றி அறிந்து கொள்ளல்" என்னும் பெயரில் கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அமைச்சுக்கும் Micro: Bit Foundation நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் இதற்குத் தேவையான பயிற்றுவித்தல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்குமாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.