• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகாண மட்டத்தில் கவசிமா கொம்போஸ்ட் இயந்திரங்களைத் தாபித்தல்
- தற்போது உள்ளுராட்சி நிறுவனங்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினையான கழிவுப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, யப்பான் கவசிமா தொழினுட்பத்தை பின்பற்றி ஒன்பது மாகாணங்களில் கொம்போஸ்ட் நிலையங்களை தாபிப்பதற்காக ஒன்பது (09) கொம்போஸ்ட் இயந்திரங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.