• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தரமிக்க கற்கைச் சூழலை உருவாக்குவதற்காக பாடசாலை வகுப்பறையை நவீனமயப்படுத்துதல்
- கடந்த ஆறு தசாப்த காலத்திற்குள் நிகழ்ந்துள்ள சமூகப் பொருளாதார அபிவிருத்திகளுக்கு ஒருங்கிணைவாக கல்வித் துறையும் துரிதமாக நவீனமயத்திற்கு உட்பட்டு வருகின்றதோடு, இதன் கீழ் புதிய பாடத்திட்டங்களின் அபிவிருத்தி, செய்முறை பரிசோதனைகள், கற்றல் கற்பித்தல் முறைகளை இற்றைப்படுத்தல், குழு செயற்பாடுகள் என்பன மூலம் ஆற்றலை மேம்படுத்துதல் போன்ற சாதகமான மாற்றங்கள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று இதற்குத் தேவையான நவீன வசதிகளுடன் பாடசாலை வகுப்பறைகள், விஞ்ஞான கூடங்கள், கணனி நிலையங்கள், மொழி ஆய்வுக்கூடம் என்பனவற்றை பாடசாலைகளில் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பல மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு மிக வசதியாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2017 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து எதிர்வரும் நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் அரசாங்க பாடசாலைகள் அனைத்திலுமுள்ள வகுப்பறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மரம் / இருப்பு இணைந்த மேசை கதிரைகளுக்குப் பதிலாக PVC அல்லாத பொலிமர் மூலப் பொருள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட தளபாடங்களை வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.