• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மையில் நிகழ்ந்த அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதலும் சேதமடைந்த பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புதலும்
- கடந்த மே மாதம் நிகழ்ந்த வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக தென் மாகாணத்தில் 182 பாடசாலைகளும் மேல் மாகாணத்தில் 177 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 112 பாடசாலைகளும் நுவரெலிய மாவட்டத்தின் ஒரு பாடசாலையுமாக மொத்தம் 472 பாடசாலைகள் பல்வேறுபட்ட விதத்தில் சேதமடைந்துள்ளன. இவற்றுள் சில பாடசாலைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாடசாலைகளின் தளபாடங்கள், கணனிகள், பாடசாலை நூலக நூல்கள், விஞ்ஞானகூட மற்றும் விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள், போன்றவற்றை மீள பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மூன்று சோடி சீருடைகளையும் ஒரு சோடி காலணியையும் வீதமும் வழங்குவதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.