• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை ஒழுங்குறுத்தும் சட்டத்தைத் திருத்துதல்
- காப்புறுதித் துறையை ஒழுங்குறுத்தும் நிறுவனமான இலங்கை காப்புறுதி சபையின் பெயரை 'இலங்கை காப்புறுதித் தொழிலை ஒழுங்குறுத்தும் ஆணைக்குழு' என மாற்றுவது அடங்கலாக திருத்தங்கள் சிலவற்றை செய்வதற்காக 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை ஒழுங்குறுத்தும் சட்டத்தைத் திருத்துவதற்கு 2013 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, இதற்கமைவாக சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலமானது சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசு மற்றும் காப்புறுதி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகள் என்பவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டு மேலும் திருத்தப்பட்டுள்ளது. உத்தேச திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து, அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.