• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக இறந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குதல்
- மீதொட்டமுல்ல கழிவு இடப்படும் பிரதேசத்தில் நிகழ்ந்த அனர்த்தம் காரணமாக 393 குடும்பங்களைச் சேர்ந்த 1,670 பேர்கள் இடம்பெயர்ந்ததோடு, 60 வீடுகள் முழுமையாகவும் மேலும் 27 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. அதேபோன்று ஆபத்துமிக்க வீடுகளாக 201 இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த அனர்த்தம் காரணமாக 33 பேர்கள் மரணமடைந்தனர். 2017 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு -

* பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து விருப்பம் தெரிவித்த குடும்பங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிருமாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குதல்;

* வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு விரும்பாத குடும்பங்களுக்கு சேதமடைந்த வீட்டின் மதிப்பீட்டு பெறுமதியை வழங்குதல்;

* சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 250,000/- ரூபாவை வழங்குதல்;

* ஆபத்துமிக்க இட்ங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 50,000/- ரூபா வீதம் மூன்று மாத காலத்திற்கு வழங்குதல்;

* நிரந்தர வீடுகளில் குடியிருப்பதற்காக செல்லும் குடும்பங்கள் சார்பில் 10,000/- ரூபாவைக் கொண்ட போக்குவரத்து கொடுப்பனவொன்றை வழங்குதல்;

போன்ற சலுகைகளை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகளுக்கு மேலதிகமாக மரணித்த ஆள் ஒருவர் சார்பில் தேசிய இயற்கை அனர்த்தத்திற்கான காப்புறுதியின் கீழ் ஒருவருக்கு 100,000/- ரூபாவும் திறைசேரியினூடாக வழங்கப்படும் 900,000/- ரூபாவும் கொண்ட ஒரு மில்லியன் ரூபாவை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.