• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையிலான சுவீகரித்தல் மற்றும் சேவைக் கடத்துகை ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் (US-CE-02)
– ஐக்கிய அமெரிக்க குடியரசின் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் இலங்கை பாதுகாப்பு சேவைகளுக்கும் இடையில் தேவையான சந்தர்ப்பங்களில் விநியோகம் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்வதற்கும் பதவியணியினரை பயிற்றுவிப்பதற்கும் அனர்த்த நிலைமைகளின் போது மானிட உதவிகளை வழங்குவதற்கும் பத்து வருட காலத்திற்கு செல்லுபடியாகும் உடன்படிக்கையொன்று 2017 மார்ச் மாதம் 05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, தற்போது குறித்த உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலம் முடிவுற்றுள்ளது. குறித்த உடன்படிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்காக இரு தரப்பும் கலந்துரையாடி உடன்பாட்டிற்கு வந்துள்ளன. நிலவும் உலகலாவிய பாதுகாப்பு நிலைமைகள், சர்வதேச உறவுகளை தொடர்ந்தும் சார்பாக நடாத்திச் செல்லும் தேவை மற்றும் புதிய தொழினுட்பம், பயிற்சி, அபிவிருத்தி வாய்ப்புகளை விருத்தி செய்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்தல் ஆகிய விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த உடன்படிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் பொருட்டு உத்தேச உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதென பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.