• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பங்களாதேசுக்கும் இலங்கைக்கும் இடையில் தகவல், தொலைத் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப துறை உட்பட அதுசார்ந்த கைத்தொழில் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- தகவல், தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் தொழினுட்ட துறைகளுக்குரிய அபிவிருத்தி ஒத்துழைப்பினை விரிவுபடுத்தும் நோக்கில் பங்களாதேசிற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்று கைச்சாத்திடப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரைவு சம்பந்தமாக இராஜதந்திர ரீதியில் இரு நாடுகளுக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதோடு, அண்மையில் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளவுள்ள அதிமேதகைய சனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.