• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதித்துறை நவீன மயப்படுத்தல் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கடன் தொகையொன்றைப் பெற்றுக்கொள்ளல்
- நிதித்துறை நவீன மயப்படுத்தல் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு கடன் இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கு இதற்கு முன்னர் பெற்றுக் கொண்ட அங்கீகாரத்தின் கீழ் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு அங்கு ஆரம்பத்தில் பிரேரிக்கப்பட்ட உலக வங்கியின் பதினேழாவது நிதி ஆண்டின் 3 ஆவது காலாண்டுக்குரிய வருடாந்த வட்டி விகிதாசாரமான 3.20 சதவீதம் தொடர்பிலான இணக்கப்பேச்சுகள் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அது 3.36 சதவீதமாக திருத்தப்பட்டிருந்தமையினால் புதிய வட்டி விகிதாசாரத்தின் கீழ் 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமமான 55.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட விசேட எடுத்தல் உரிமை கடன் தொகையொன்றைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்துடன் உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.