• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- பல்கலைக்கழகங்களில் நிலவும் இடவசதிகள் உட்பட ஏனைய வசதிகளை மேம்படுத்தி அவற்றிற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போது கற்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நோக்கிலும் பேராதனை, ரஜரட்ட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, சப்பிரகமுவ, யாழ்ப்பாணம், வயம்ப மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 14 கருத்திட்டங்கள் 7,640.23 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவின் கீழ் 2018 - 2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.