• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களில் கட்டடங்களை நிருமாணிப்பதற்குரியதான ஒப்பந்தங்களைக் கையளித்தல்
- பின்வரும் 06 பல்கலைக்கழகங்களின் நிருமாணிப்பு வேலைகள் 08 சார்பில் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் பொருட்டு போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டு குழுக்களினதும் அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவினதும் சிபாரின் பிரகாரம் உரிய ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொழினுட்ப கற்கை கட்டடமொன்றை நிருமாணித்தலும் ஆங்கில மொழி கற்கை நிலையமொன்றிற்கு கட்டடமொன்றை நிருமாணித்தலும்.

* இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் பதவியணி சார்பில் வீட்டுத் தொகுதியொன்றை நிருமாணித்தல்.

* இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் தொழினுட்ப கற்கைகள் திணைக்களம் சார்பில் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்.

* கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் மேற்கு கட்டடத்தை நீடித்தல்.

* பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தின் நீடிப்பும் பொறியியல் பீடம் சார்பில் கட்டடமொன்றை நிருமாணித்தலும்.

* வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் சார்பில் கட்டடமொன்றை நிருமாணித்தல்.