• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருகொடவத்தை - அம்பதளை வீதி அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நீர் குழாய் பாதையையும் விருத்தி செய்தல்
- ஒருகொடவத்தை - அம்பதளை வீதி அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக ஒருகொடவத்தை முதல் கடுவளை வரையான நீ்ர் விநியோக குழாய் முறைமையை மீளப்பதிக்க வேண்டியுள்ளது. 46.21 மில்லியன் யூரோ கொண்ட தொகைக்கு இந்த கருத்திட்டத்தின் ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு 2017 மார்ச் 21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்டதிதிற்குத் தேவையான நிதியத்தில் 85 சதவீதத்தை வழங்குவதற்கு ஒஸ்றியாவின் Uni Credit Bank நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, எஞ்சிய 15 சதவீதமான நிதித் தேவையை வழங்குவதற்கு மக்கள் வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக உரிய கடன் உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.