• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தேயிலை பயிர்செய்கையுடன் இணைந்த பூச்சிகள் மற்றும் நோய்கள் முகாமைத்துவத்திற்காக உற்பத்தி திறன்மிக்க உயிரியல் கட்டுப் பாட்டு கரைசல்களை இனங்காண்பதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
- தேயிலை காணிகளை பயனுள்ள மற்றும் இலாபமீட்டும் விதத்தில் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலைச் செய்கைக்கு பாதகமான கறையான், முட்டைப்புழு போன்ற பூச்சிகள் உட்பட தேயிலைச் செய்கையின் வேர், நடுத்தண்டு சார்ந்த நோய்களை முகாமிப்பதற்கும் பொருத்தமான உயிரியல் கட்டுப்பாட்டு கரைசலொன்றை ஒதுக்கிவைப்பதற்கும் இனங்காண்பதற்கும் வகைப்படுத்துவதற்கும் விருத்தி செய்வதற்கும் அத்துடன் இதன் பாவனையின் பெறுபேற்றினை மதிப்பிடும் பொருட்டு ஆய்வொன்றை மேற்கொள்வதற்குமாக இந்தியாவின் Synkromax Biotech (Pvt) Ltd. கம்பனிக்கும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடை யில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் பொருட்டு பெருந் தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.