• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய உயர் விளையாட்டுக் கட்டடத்தொகுதி பயிற்சி நிலையத்தில் விளையாட்டு ஹோட்டல் ஒன்றை நிருமாணித்தல்
- மெய்வல்லுநர் போட்டிகள் அடங்கலாக ஏனைய விளையாட்டு களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நுவரெலியா ரேஸ்கோஸ் மைதானத்தில் உயர் விளையாட்டு கட்டடத்தொகுதி ஒன்றை நிருமாணிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விளையாட்டுப் பயிற்சி நிலையதின் நிருமாணிப்பிற்கு ஒருங்கிணைவாக அதற்கு அண்மையில் சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டு ஹோட்டலொன்றை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலை நிருமாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நுவரொலியா, பதுளை வீதியிலுள்ள ஏக்கர் 01 றூட் 01 பேர்ச்சர்ஸ் 23.69 விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை விளையாட்டுத்துறை அமைச்சிற்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.