• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 வரவுசெலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான பெரும்பாக அரசிறை கட்டமைப்பு
- செயற்றிறன் அடிப்படையிலான வரவுசெலவுத்திட்ட அணுகுமுறைக்கு நடுத்தவணைக்கால ரீதியில் முறையாக செல்லும் விதத்தில் நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிப்பதற்காக 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் பூச்சிய அடிப்படையிலான வரவுசெலவுத்திட்ட (Zero Based Budgeting) வழிமுறையானது பயன்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டமானது "செயற்திறன் அடிப்படையிலான வரவுசெலவுத்திட்டம்" என்னும் வழிமுறையின் மீது தயாரிக்கும் பொருட்டு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருகின்றன.

இதற்கமைவாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் தயாரிக்கப்படும் “2018 - 2020 நடுத்தவணைக்கால பெரும்பாக அரசிறை கட்டமைப்பு" என்பது மீண்டுவரும் செலவினத்தை மிக பயனுள்ள விதத்தில் சீராக்குதல், மூலதன செலவுகளை முன்னுரிமைப்படுத்துதல், அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல் ஆகிய பிரதான காரணிகளை கொண்டிருக்கும். இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டளவில் பின்வரும் குறியிலக்குகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

i. அசாங்க வருமானத்தை தேறிய உள்நாட்டு உற்பத்தியில் 16.5 சதவீதம் வரை அதிகரித்தல்.

ii. அரசாங்கத்தின் மீண்டுவரும் செலவினத்தை தேறிய உள்நாட்டு உற்பத்தியில் 14.8 சதவீதத்திற்கு கொண்டுவருதல்.

iii. அரசாங்க முதலீடுகளை தேறிய உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதத்திற்கு கொண்டுவருதல்.

iv. வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை தேறிய உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம்வரை குறைத்தல்.

v. அரசாங்க கடன்களை தேறிய உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதம்வரை குறைத்தல்.

இந்த குறியிலக்குகளை அடைவதன் மூலம் ஒற்றை இலக்க மட்டத்தில் பணவீக்க வேகத்தை முடக்கி வைப்பதற்கும் நடுத்தவணைக்கால பொருளாதார விருத்தி வேகத்தை 6% - 7% மட்டத்தில் பேணுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் முதலீடுகளை கவர்ந்திழுக்கும் பொருட்டு உரிய பிரிவுகளின் ஆற்றல் கனிசமான மட்டத்தில் விரிவடைய வேண்டுமென்பதனால் நிருமாணித்து, செயற்படுத்தி, கையளிக்கும் வழிமுறை அடங்கலாக அரசாங்க - தனியாார் பங்குடமை கருத்திட்டங்களின்பால் கூடிய கவனம் செலுத்தப்படும்.

அதேபோன்று புதிய கருத்திட்டங்களுக்கு வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை ஒதுக்கும் போது சமூக பொருளாதார தேவைகள் அதேபோன்று நடுத்தவணைக்கால மற்றும் நீண்டகால குறியிலக்குகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஏற்பாடுகள் குறித்தொதுக்கப்படும். விசேடமாக இங்கு செயற்திறன் சுட்டெண்கள் அடிப்படையாகக் கொள்ளப்படும். ஏற்கனவே வௌிப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை கட்டமைப்பு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதோடு, வரி வருமான சேகரிப்பினை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக, 2018 - 2020 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்கு ஒத்திசைவாக செயற்றிறன் அடிப்படையிலான வரவுசெலவுத்திட்ட அணுகுமுறைக்கு அமைவாக 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கும் அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2018 ஆம் ஆண்டு சார்பில் வரிசை அமைச்சுகளுக்கு வரவுசெலவுத்திட்ட வரையறைகளை விதித்துரைப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.