• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திடீர் அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக 25 மாவட்டங்களிலும் தங்கவைக்கும் நிலையங்களைத் தாபித்தல்
- திடீர் அனர்த்த நிலைமைகளின் போது அது பற்றி முன்னறிவித்தல் செய்யப்பட்டவுடன் பாதிப்பிற்குள்ளாகும் உரிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி தங்கவைக்கும் நிலையங்களில் தங்கவைப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கும் தேவையான ஏனைய நிவாரணங்களை வினைத்திறனுடன் வழங்குவதற்கும் முடியும். மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைக் கட்டடங்கள் தற்போது பரவலாக தற்காலிக தங்கவைக்கும் நிலையங்களாக பயன்படுத்தப்படு கின்றதோடு, அவற்றின் வசதிகள் போதுமானதாக இல்லாமையினாலும் பாடசாலைக் கட்டடங்களை பயன்படுத்துவதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இது பிரதிகூலமான விதத்தில் பாதிக்கின்றமையினாலும் எந்தவொரு அனர்த்த நிலைமையின் போதும் பயன்படுத்தக்கூடிய பொது தங்கவைக்கும் நிலையங்களை மாவட்ட மட்டத்தில நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 25 மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் ஒரே தடவையில் ஆட்கள் 100 தொடக்கம் 200 வரையில் தங்கவைக்க கூடிய 100 தங்கவைக்கும் நிலையங்களை 2018 - 2020 காலப்பகுதிக்குள் நாடுமுழுவதும் நிருமாணிப்பதற்கும் அனர்த்த நிவாரண முகாம்களாக இந்த நிலையங்கள் பயன்படுத்தப்படாத காலப்பகுதியில் இந்த கட்டடங்களையும் வளங்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறையொன்றை வகுத்தமைப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.