• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாணத்தில் ஒன்றுசேரும் நகர திண்மக்கழிவு முகாமைத்து வத்திற்கான நீண்டகால தீர்வு - புத்தளம், அறுவக்காலு துப்பரவேற்பாட்டு குப்பையிடும் இடங்களை நிரப்பும் கருத்திட்டம்
- கொழும்பு நகரத்தில் நாளாந்தம் ஒன்றுசேரும் சுமார் 1,200 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகளை முகாமிக்கும் நீண்டகால தீர்வொன்றாக இந்த கழிவுகளை உரிய முறையில் பொதியிட்டு 20 அடிகளைக் கொண்ட கொள்கலன்கள் மூலம் களனியவிலிருந்து புத்தளம், அறுவக்காலு பிரதேசத்திற்கு புகையிரதம் மூலம் கொண்டு சென்று, சுண்ணாம்புக் கற்களைப் பெற்றுக் கொள்வதற்காக அகழப்பட்டு கைவிடப்பட்டுள்ள குழிகளை பயன்படுத்தி நிருமாணிக்கப்படவுள்ள துப்பரவேற்பாட்டு நில பகுதியில் பாதுகாப்பான விதத்தில் கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையினதும் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையினதும் ஆரம்ப சுற்றாடல் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதோடு, இந்த அறிக்கைகள் யூலை மாத இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்க்பபடுகின்றது. அதன் பின்னர், கருத்திட்டத்தின் ஆரம்ப செயற்பாட்டு பணிகளை 06-08 மாதங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கும் உலக வங்கி அடிப்படையில் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தக் கருத்திட்டத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு தேசிய கொள்வனவு வழிகாட்டலின் பிரகாரம் "வரையறுக்கப்பட்ட சருவதேச போட்டி" மற்றும் "வரையறுக்கப்பட்ட உள்நாட்டு போட்டிகரமான" கேள்வி கோருவதற்கும் உத்தேச கருத்திட்டத்திற்குத் தேவையான காணியை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அறுவக்காலு காணியிலிருந்து சுவீகரிப்பதற்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்குத் தேவையான ஏனைய வசதிகளை நிருமாணிப்பதற்கும் தேவையான காணி மற்றும் சொத்துக்களை சுவீகரிப்பது சம்பந்தமாக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், Siam City Cement (Lanka) Pvt. Ltd., கம்பனி அடங்கலாக அரசாங்க மற்றும் தனியார் தரப்பினர்களுடன் கலந்துரையாடும் பொருட்டு உரிய நிலையியல் கொள்வனவுக் குழுவுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.