• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாலபே டொக்டர் நெவில் பெர்ணாண்டோ இலங்கை ரஷ்ய நட்புறவு மருத்துவமனையை அரசாங்கத்திற்கு உடைமையாக்குதலும் தெற்காசிய தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவகத்தின் எதிர்கால முகாமைத்துவ கட்டமைப்புக்கான பிரேரிப்புகளும்
- 100 படுக்கைகளுடனான அறை வசதிகள் உட்பட 500 படுக்கைகளுடனான சாதாரண காவறைகளுடன் கூடிய தனியார் மருத்துவமனையொன்றாக 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட மாலபே டொக்டர் நெவில் பெர்ணாண்டோ இலங்கை ரஷ்ய நட்புறவு மருத்துவமனை மாதமொன்றுக்கு சுமார் 3,000 வௌிநோயாளர்களுக்கும் சுமார் 100 தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கும் சிகிசை அளித்து படிப்படியாக வளர்ச்சிகண்ட போதிலும் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் மருத்துவ மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு போதுமான அளவு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை இந்த வைத்தியசாலைக்கு தொடர்புபடுத்துவதில் கடினமான ஒரு நிலை உருவாகியுள்ளது.

கொழும்பு கிழக்குப் பிரதேசத்தின் மூன்றாம் நிலை சுகாதார சிகிச்சை சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்காக நிலவும் வரையறை மற்றும் அதிவேக பாதைக்கு அண்மையில் அமைந்திருத்தல் காரணமாக தூர இடங்களிலிருந்துவரும் நோயாளிகளுக்கு இலகுவாக செல்வதற்கு இயலும் என்பதையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 3.55 பில்லியன் ரூபா அரசாங்க மதிப்பீட்டுப் பெறுமதியைக் கொண்ட மாலபே டொக்டர் நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலையை இலங்கை அரசாங்கத்திற்கு உடைமையாக்குவதற்கும் இந்த வைத்தியசாலையை நிறுவுவதற்காக SAITM நிறுவனத்தினால் இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்தொகையை 10 வருடகாலத்திற்குள் தீர்க்கப்பட்டதன் பின்னர், அதன் உரிமையை அரசாங்கத்திற்கு முழுமையாக உடைமையாக்கிக் கொள்வதற்கும் தற்போது ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை நிருவகிக்கப்பட்டு வரும் முறைக்குச் சமமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நியமிக்கப்படும் ஆளுநர் சபையொன்றின் மூலம் இந்த வைத்தியசாலையை முகாமிப்பதன் ஊடாக பொதுமக்களுக்கு இலவசமாக சுகாதார சிகிச்சை சேவைகளை வழங்குவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினாலும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அத்துடன் தெற்காசிய தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவகத்தின் உரிமையை விரிவுபடுத்துவது சம்பந்தமாக உரிய சகல தரப்பினர்களிடமும் உசாவுதலைச் செய்து, மாற்று பிரேரிப்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டுமெனவும்கூடத் தீர்மானிக்கப்பட்டது.