• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தபால் திணைக்களத்திற்கு விசேடமான சேவைப் பிரமாணக் குறிப்பொன்றை அங்கீகரிப்பித்துக் கொள்ளல்
- 06/2006 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிருவாக சுற்றறிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தபால் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு 09 ஆட்சேர்ப்புத் திட்டங்கள் அங்கீகரிப்பித்துக் கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துகையில் எழுந்துள்ள நடைமுறை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கமைவாக, தரங்கள் ஒவ்வொன்றுக்கும் இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஆட்சேர்ப்புத் திட்டங்களைக் கொண்ட தபால் திணைக்களத்திற்கே உரிய சேவைப் பிரமாணக் குறிப்பொன்றைத் தயாரித்துக் கொள்வது சம்பந்தமாக பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரின் செயலாளரினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் சிரேட்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுக்களினதும் தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.