• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் ஒன்றிற்காக தலபத்பிட்டிய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காணியை குத்தகைக்களித்தல்
- ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள பத்தரமுல்லையிலும் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலும் அமைந்துள்ள காணிகளிலிருந்து ஏக்கர் 06 றூட் 00 பேர்ச்சர்ஸ 9.60 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான அபி்விருத்தியாளர் ஒருவரை இனங்காணும் பொருட்டு அரசாங்க பெறுகை நடவடிக்கையின் கீழ் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்காக மூன்று 03 கேள்விதாரர்கள் முன்வந்துள்ளதோடு, அவர்களுடைய தொழினுட்ப பிரேரிப்புகளை மதிப்பிட்ட அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த காணித் துண்டுக்கான அரசாங்க மதிப்பீட்டிற்கு (514 மில்லியன் ரூபா) ஒப்பீட்டளவில் கூடிய விலையினை முன்வைத்துள்ள முதலீட்டாளர் ஒருவரான M/s. Monarch Imperial (Pvt.) Ltd நிறுவனத்திற்கு 1,200 மில்லியன் ரூபா தொகையில் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறித்த காணியை 99 வருடகால குத்தகை அடிப்படையில் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.