• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலத்திரனியல் பெறுகை முறையை இலங்கை அரசாங்க பெறுகை முறையினுள் அறிமுகப்படுத்துதல்
- மொத்த அரசாங்க செலவுகளில் 20% - 25% இடைப்பட்ட அளவு செலவாவது அரசாங்க துறைசார்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்வனவு செய்வதற்கு என்பதனால் அரசாங்க துறையின் பெறுகை நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான ஒரு அங்கமாகும். நடைமுறையிலுள்ள கொள்வனவு வழிமுறையின் கீழ் விலைகளை மதிப்பிடுவதற்கு நீண்டகாலம் எடுத்தல், வௌிப்படைத்தன்மை மற்றும் போட்டிகரமான நிலை குறைவடைதல் போன்ற குறைபாடுகள் காரணமாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதோடு, இது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின்பால் நேரடியாக தாக்கத்தைச் செலுத்துகின்றது.

“இலத்திரனியில் அரசாங்க பெறுகை - வெற்றி, வாய்ப்பு மற்றும் சவால்கள்" என்னும் தொனிப்பொருளின் கீழ் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் கலந்துகொண்ட 2017 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதிவரை கொழும்பிலும் கண்டியிலும் நடாத்தப்பட்ட தெற்காசிய வலய பெறுகை மாநாட்டில் இலங்கை தவிர ஏனைய பெரும்பாலான தெற்காசிய நாடுகள் இலத்திரனியல் பெறுகை வழிமுறையை பயன்படுத்துகின்றனவெனவும் இதனால் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளனவெனவும் தெரியவந்துள்ளது. நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி பெறுகை நடவடிக்கைகளிலுள்ள சில குறைபாடுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்பதனால் பெறுகை செயற்பாட்டையும் இதற்கமைவாக மீளமைத்து இலத்திரனியல் பெறுகை வழிமுறையை அறிமுக்கப்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக, அரசாங்க இலத்திரனியல் பெறுகை வழிமுறையை அரசாங்க பெறுகை செயற்பாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் இதன்சார்பில் பொருத்தமான செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு அரசாங்க நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் அதிபதியின் தலைமையில் ஏனைய உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.