• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் சார்பில் கட்டடமொன்றை நிருமாணித்தல்
- பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் என்பது HIV, AIDS மற்றும் STD பாலுறுப்பு நோய்களை இனங்காணுதல், சிகிச்சையளித்தல், தடுத்தல் என்பன சம்பந்தமாக இலங்கையில் தேசிய மைய நிலையமாக செயலாற்றும் மக்கள் சுகாதார நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். தற்போது வருடாந்தம் சுமார் 23,000 புதிய நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த கிளினிக்குகளுக்கு வருகை தருவதோடு சிகிச்சைத் தேவைப்படும் ஆயினும் இனங்காணப்படாத HIV தொற்றுக்குள்ளான சுமார் 4,000 நோயாளிகள் இருக்கின்றார்களென கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான அலுவலகம் கொழும்பு 10, த சேரம் பிரதேசத்தில் தற்போது தாபிக்கப்பட்டுள்ளதோடு, இதன்கீழான ஏனைய அலுவலக கூறுகள் சில ரீ.பீ ஜாயா மாவத்தையில் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பணிகளை இரண்டு இடங்களில் நடாத்திச் செல்வதன் மூலம் உருவாகும் வசதியீனங்களை தடுக்கும் பொருட்டு தற்போது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான அலுவலகம் நடாத்திச் செல்லப்படும் இடத்திலேயே நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை புதிதாக நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.