• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண வீதி அபிவிருத்தி கருத்திட்டம் - வாத்துவ - மொறன்துடுவ வீதியையும் (B 449), பெல்லன-மொறகல (B 544) வீதியையும் மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான ஒப்பந்தத்தை கையளித்தல்
- சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் வழங்கப்படும் நிதி ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் மேல் மாகாண வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வாத்துவ - மொறன்துடுவ வீதியின் (B 449) 0 கிலோ மீற்றரிலிருந்து 5.3 கிலோ மீற்றர் வரையிலான வீதிப் பகுதியையும் பெல்லன-மொறகல வீதியின் (B 544) 0 கிலோ மீற்றரிலிருந்து 9.8 கிலோ மீற்றர் வரையிலான வீதிப் பகுதியையும் மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான தகுதி வாய்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் நோக்கில் சருவதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அற்காக 08 விலைமுன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விலைமுன்வைப்புகளை மதிப்பீடு செய்த தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தம் தொடர்பில் ஆகக்குறைந்த அனுசரணையான விலைமுன்வைப்பு செய்துள்ள மாகா இன்ஜினியரிங் பிறைவேட் கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.