• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தொழினுட்ப பயிலுனர்கள் சார்பில் யப்பானில் தொழினுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- தொழினுட்ப துறைசார்ந்த பயிலுநர்களாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு யப்பான் கம்பனிகளில் சேவைசார் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு யப்பானிலுள்ள புகழ்பெற்ற ஆள்வலு அபிவிருத்தி நிறுவனமொன்றான International Manpower Development Organization (IM Japan) நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.