• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்பள்ளிபருவ அபிவிருத்தி தர நியமங்களை "முன்பள்ளிபருவ அபிவிருத்தி தேசிய தர நியமங்கள்" என மாற்றியமைத்தல்
- 3-5 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குழந்தைகள் முறையாக முன்பள்ளி செல்வதற்கு பழகி, கல்வியைப் பெற்றுக் கொள்ளும் ஆரம்ப வழிநடத்தல் முன்பள்ளிசார்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறுபட்ட விடயங்களின் ஊடாக குழந்தைகளுக்கான செயற்பாடுகளை திட்டமிடுகின்ற மையினால் அதன்சார்பில் சரியான தரங்களை அறிமுகப்படுத்துவது அத்தியாவசிய விடயமொன்றாகும். இதற்கமைவாக சிறுவர் செயலகத்தினால் தயாரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்களினதும் அனைத்து மாகாணசபைகளினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் மீளாய்வு செய்யப்பட்டுள்ள முன்பள்ளிபருவ அபிவிருத்தி தர நியமங்களை "முன்பள்ளிபருவ அபிவிருத்தி தேசிய தர நியமங்கள்" என வௌிப்படுத்துவதற்கும் இந்த தரங்களை மாகாணசபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் என்பவற்றுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.