• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கரும்பு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் சீனாவின் யுனான் விவசாய விஞ்ஞான கற்கை அக்கடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்ளல்
- கரும்பு மரபணு பிளாஸ்மா பரிமாற்றல், பயன்பாடு, மரபணு பிளாஸ்மா மதிப்பீடு, கரும்பு செய்கைக்குரிய அறிவு, தகவல் மற்றும் நிபுணத்துவ அறிவு என்பவற்றை பரிமாறிக் கொள்வதற்கும் இளைய விஞ்ஞானிகளைப் பயிற்றுவிப்பதற்கும் அத்துடன், இரு நாடுகளினதும் முக்கியமான பொது விடயங்கள் சம்பந்தமாக ஆராய்தல், பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துகொள்ளல் போன்ற விடயங்களில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் சீனாவின் யுனான் மாகாணத்தில் குன்மிங்கில் அமைந்துள்ள யுனான் விவசாய விஞ்ஞான கற்கை அக்கடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் கரும்பு ஆராய்ச்சியினை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையையும் கரும்பு மரபணு மூலப்பொருட்களை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையையும் கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.