• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுபிக் கடல் இறால் வளர்ப்புக்காக Thai Lanka Aqua (Private) கம்பனிக்குத் தேவையான காணிகளை குறித்தொதுக்குதல்
- இலங்கையில் புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு சுமார் 10,000 ஏக்கர் காணியில் இறால் வளர்க்கப்படுவதோடு, வருடாந்த இறால் உற்பத்தி சுமார் 6,030 மெற்றிக் தொன்களாகும். இதில் சுமார் 2,500 மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, 16 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட வருமானம் இதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. வௌ்ளைப்புள்ளி நோய்க்கு ஆளானமையினால் நாட்டில் வளர்க்கப்பட்ட இறால் ஏற்றுமதி தரத்தினை கொண்டிருக்காததன் காரணமாக இந்த கைத்தொழிலானது பின்னடைந்துள்ளது. நீர்வாழ் இறால் வளர்ப்பு துரித வளர்ச்சிக்கு வௌ்ளைப்புள்ளிநோய் தடையாக உள்ளமையினால் உலக சந்தையில் கூடிய கேள்வி நிலவும் பசுபிக் வௌ்ளை இறால் வளர்ப்பினை நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நிருவாக மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவினுள் உத்தேச நீர்வாழ் வளர்ப்பு கைத்தொழில் பேட்டைக்கு அண்மையில் பசுபிக் கடல் இறால் வளர்ப்புக்காக கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு Thai Lanka Aqua (Private) கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டப் பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கருத்திட்டக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் "நீர்வாழ் வளர்ப்பு கைத்தொழில் பேட்டையொன்று" ஆக அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ள காணிக்கு அண்மையில் 250 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை பசுபிக் கடல் இறால் வளர்ப்பு கருத்திட்டமொன்றுக்கா Thai Lanka Aqua (Private) கம்பனிக்கு 30 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக குறித்தொதுக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.