• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹோமாகம பிட்டிபன தொழினுட்ப நகரத்தின் பிரதான நுழைவு பாதையொன்றான கொட்டாவ - பின்ஹேன வீதியை அபிவிருத்தி செய்தல்
- மாலம்பே, கொட்டாவ, ஹோமாகம, அத்துருகிரிய மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களை தழுவும் விதத்தில் மேல் மாகாண மாநகர திட்டத்தின் கீழ் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப நகரம் நிருமாணிக்கப்படுகின்றது. இதற்கமைவாக ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் 200 ஏக்கர் காணி அரசாங்க பல்கலைக்கழகங்களின் இணை தகவல் தொழினுட்பம் உட்பட ஏனைய தொழினுட்ப பீடங்களை தாபிக்கும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி பணிகளுக்கு ஒருங்கிணைவாக இலகுவாக செல்லக்கூடிய விதத்தில் அதற்கு அண்மித்த வீதி முறைமைய விரிவுபடுத்தும், அபிவிருத்தி செய்யும் பணியானது அவசரத் தேவையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவேண்டிய வீதியொன்றாக இனங்காணப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிருவகிக்கப்படும் கொட்டாவ - பிங்ஹேன வீதியை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு குறித்தொதுக்கப்படும் நிதி ஏற்பாட்டின் ஊடாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.