• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி நிதி ஏற்பாடுகளின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 06 பிரதான கருத்திட்டங்களின் கீழ் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக 06 பிரதான அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழான கருத்திட்ட ஆக்கக்கூறுகளின் கீழ் 13 கருத்திட்டங்களும் மாகாணங்கள் சார்ந்த நகரப் பிரதேச அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 16 உம் நகர மற்றும் கழிவுப்பொருள் முகாமைத்துவம் சார்ந்த 10 கருத்திட்டங்களுமாக 39 துணைக்கருத்திட்டங்கள் மூன்று பிரதான கருத்திட்டங்களின் கீழ் 20 மில்லியன் ரூபாவுக்கு கூடிய திறைசேரி நிதி ஏற்பாடுகளின் மூலம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.