• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டின் முடிவில் வருமான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2017 முதலாம் காலாண்டின் அரசாங்க வருமானம் 436 பில்லியன் ரூபா ஆவதோடு, மொத்த அரசாங்க வருமானத்தின் 95 சதவீதம் அதாவது 415 பில்லியன் ரூபா வரி வருமானமாகும். முதலாம் காலாண்டின் வருமானம் சேகரிக்கும் நூற்றுவீதம் வருடாந்த மதிப்பீட்டின் 22 சதவீதமாகும் இது முதல் காலண்டுக்கான குறியிலக்கின் 94 சதவீதமாகும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட குறியிலக்குகளைவிட வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும், வருமானவரி மற்றும் மதுவரி அறவிடல் சம்பந்தமாக குறியிலக்குகள் எட்டப்படவில்லை. முக்கியமாக மதுசாரம் மற்றும் சிகரட் சார்பிலான கலால்வரி சேகரிப்பில் குறைந்த முன்னேற்றம் காணக்கிடைக்கின்றமை பற்றியும் கவனத்திற்கு கொணடு வரப்பட்டது. இந்த விடயம் உள்ளடக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டின் ஒவ்வொரு மாத இறுதியிலும் அத்துடன் காலாண்டு முடிவிலும் அரசாங்க வருமான விபரங்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.