• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்தங்களைக் குறைத்தலும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குமாக உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
- அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் அனர்த்த நிலையினை குறைப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முக்கிய பணி உள்ளதென தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கையின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அபிவிருத்தி பணிகள் சகலவற்றினதும் திட்டமிடலுக்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதோடு, தங்களுடைய உள்ளூராட்சி அதிகார பிரதேசங்களினுள் மேற்கொள்ளும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு அனர்த்தங்களைக் குறைக்கும் வழிமுறைகளை உள்ளடக்கும் விதத்தில் துணைவிதிகளை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய உள்ளூராட்சி கொள்கையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், அனர்த்தங்களுக்கு ஆளாகும் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடும்போதும் நிருமாணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போதும் உரிய கட்டட தரங்களையும் உரிய அறிவுறுத்தல்களையும் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிருவாகம் மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளமையினால், அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் வழிகாட்டல்களுக்கு அமைவாக உரிய உள்ளூராட்சி அதிகார பிரதேசம் சார்பில் அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு மாகாணசபைகள் ஒவ்வொன்றினதும் முதலமைச்சர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.