• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்சரிவு உயர் அபாயம் மிக்க வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிருமாணித்தல்
- இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள உயர் மண்சரிவு அபாயம் மிக்க வலயங்களில் 14,680 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனவென தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் இனங்காணப்பட்டுள்ளது. கடும் மழை நிலவும் காலப்பகுதிகளில் இந்தக் குடும்பங்கள் அனர்த்தத்திற்குள்ளாகும் நிலைமையுள்ளமையினால் அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி துரிதமாக ஏற்ற வேறு இடங்களில் குடியமர்த்தும் தேவை எழுந்துள்ளது. இதற்கு அமைவாக இந்தக் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இடங்களிலிருந்து காணியொன்றையும் வீடொன்றையும் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்குவதற்கும் இதன்போது வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் நடடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புக் கருத்திட்டங் களிலிருந்து வீடுகளை வழங்கும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்கும் இந்தக் குடும்பங்கள் மீண்டும் உயர் ஆபத்துமிக்க வலயங்களில் அவர்களுடைய வீடுகளில் குடியிருப்பதை தடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.