• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க உதவியுடன் நிருமாணிக்கப்படும் கட்டடங்கள் சார்பில் Lease - Back OPEX Module முறையை பயன்படுத்துதல்
- நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் வளர்ச்சியடைந்ததன் காரணமாக அரசாங்க துறைக்குத் தேவையான இடவசதிகள் படிப்படியாக அதிகரித்துள்ளன. அரசாங்கத்திற்குத் தேவையான கட்டடங்களை நிருமாணிப்பதற்கு 2016 ஆம் ஆண்டில் 21.4 பில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டில் 16.3 பில்லியன் ரூபாவும் செலவுசெய்யப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக முன்னுரிமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நிதியிடுவதற்குள்ள ஆற்றல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள Lease - Back OPEX Module முறையின் கீழ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தகுதி விதிகளுக்கு அமைவாக கட்டடங்களை நிருமாணிப்பதற்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கும் நிருமாணிக்கப்படும் கட்டடத்தை உடன்பட்ட காலப்பகுதிக்கு வாடகை அடிப்படையில் அரசாங்கத்தினால் பயன்படுத்துவதற்கும் இதன்போது காணி சார்பில் தனியார் முதலீட்டாளரினால் அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய குத்தகைத் தொகையை அரசாங்கத்தினால் கட்டடத்திற்காக செலுத்தவேண்டிய குத்தகைத்தொகைக்கு பதிலீடு செய்யவேண்டி வருகின்றமையினால் இது அரசாங்கத்திற்கு பயனுள்ள நிலையாகும் என்பதோடு, இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்க நிதி ஓட்டத்திற்கு ஏற்படும் தாக்கம் மிகக்குறைவானதாகும். இதற்கமைவாக அரசாங்கத்திற்குத் தேவையான கட்டட வசதிகளை ஈடுசெய்து கொள்வதற்கு அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு பொறிமுறையூடாக நிதி ஓட்டத்திற்கு கொண்டுவரும் முயற்சியொன்றாக "சொத்துக்களை மீள குத்தகைக்களிக்கும் அபிவிருத்தி முறையை" பயன்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.