• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- அயனமண்டல வலயத்திலுள்ள தீவக நாடொன்றாவதன் காரணமாக காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இலங்கை ஆளாவதற்கான ஆகக்கூடிய அபாயம் நிலவுகின்றது. ஆதலால் அதற்கு முகங்கொடுக்கும் ஆற்றலை விருத்தி செய்வதற்கு அரசாங்க மற்றும் அரச சார்பற்ற இயைபுடைய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைக்கப்பட்ட இணக்கப்பாட்டின் தகவுதிறன்களின் மீதும் அதன் நிதிப் பங்களிப்புடனும் "காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய திட்டம் - 2016-2025" தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காலநிலை மாற்றங்கள் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் உணவு பாதுகாப்பு, நீர்வழங்கல், கரையோரம், சமுத்திரம், சுகாதாரம், மனிதக் குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றாடல் முறைமைகள், உயிர் பல்வகைமை, சுற்றுலாத்துறை, களியாட்டம், ஏற்றுமதி கமத்தொழில், கைத்தொழில், வலுசக்தி மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் தழுவப்படும். இதற்கமைவாக துறைசார்ந்த முன்னுரிமைகளை அடிப்படையாக் கொண்டு, நடுத்தவணைக் கால ரீதியில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தி இந்த திட்டத்தை 2016-2025 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.