• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாநகர சபை மற்றும் அதனை அண்டிய மாநகர சபைகள் / நகர சபைகளின் பிரதேசங்களில் குப்பைகூளங்களை அகற்றுதல்
- பல்வேறுபட்ட காரணங்களினால் கொழும்பு மாநகரசபை மற்றும் அதனை அண்டிய மாநகர சபைகள் / நகர சபைகளின் அதிகார பிரதேசங்களில் குப்பைகூளங்களை அகற்றுதலானது முறையாகவும் உரிய வகையிலும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக எழுந்துள்ள சுகாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறிவதற்காக உரிய உள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்படும் இடங்களில் சுற்றாடல் சட்டங்களுக்கு அமைவாக குப்பைகூளங்களை இடுதல். குப்பைகூளங்கள் இடப்படுவதனால் எழக்கூடிய மக்கள் எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்காக நீதிமன்ற கட்டளைகளைப் பெற்றுக் கொள்ளல், உரிய முறையில் பிரித்ததன் பின்னர் மாத்திரம் குப்பைகூளங்களை இடவேண்டுமென கட்டளையிடுதல், கழிவு முகாமைத்துவம் சார்பில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், இது பற்றி மக்களுக்கு அறியச் செய்வித்தல், பாதைகளில் குப்பைகூளங்கள் இடுதலை தடுத்தல், பொலித்தீன் சுற்றாடலில் இடுவதை குறைப்பதற்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துதல் போன்று நடவடிக்கைகளை இணங்கியொழுகும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.