• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (SVAT) திட்டத்தை நீக்குதல்
- வரவுசெலவுத்திட்ட முன்மொழிபுகள் மூலம் வௌிப்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலமானது அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டது. இதன்போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திருத்தங்களில் ஒரு பிரேரிப்பானது பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின்படி இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (SVAT) திட்டத்தை நீக்குவதாகும். ஏற்றுமதியாளர்களுக்கு இதன்சார்பில் போதுமான காலப்பகுதியினை வழங்கி இந்த வரித்திட்டம் இல்லாதொழிக்கப்படுதலானது 2018 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் திருத்தியமைத்து மீள தயாரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.